ஈரானில் கைது செய்யப்பட்ட நர்கஸ் முகமதி உடல் ரீதியான காயங்களுக்கு உள்ளானதாக தகவல்!
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதி (Narges Mohammadi) கடந்த வாரம் ஈரானிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு முறை மருத்துமவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
வடகிழக்கு நகரமான மஷாத்தில் (Mashhad) அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது உடல் ரீதியான பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக முகமதியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் நேற்று சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், முகமதி கைது செய்யப்பட்ட பின்னர் அவருடன் தொலைபேசியில் சுருக்கமாகப் பேசியதாகவும், அவசர சிகிச்சை தேவைப்படும் தொடர்ச்சியான அடிகளை அவர் விவரித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆதரவாளர்களால் பகிரப்பட்ட படங்கள், பாதுகாப்புப் படையினர் உள்ளே நுழைவதற்கு சற்று முன்பு ஒரு கூட்டத்தினரிடம் அவர் பேசியதைக் காட்டுகின்றன. மற்றவை அவர் மருத்துவ உதவிக்காக அழைத்துச் செல்லப்பட்டதைக் காட்டுகின்றன.
ஈரானிய அதிகாரிகள் இது தொடர்பில் பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மனித உரிமை வழக்கறிஞர் கோஸ்ரோ அலிகோர்டியின் (Khosrow Alikordi) மரண நிகழ்வில் கலந்துகொண்டபோது 53 வயதான முகமதி கைது செய்யப்பட்டிருந்தார்.





