இலங்கையில் பெற்றோரை இழந்த சிறுவர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்
இலங்கையில் கடந்த 27ஆம் திகதி முதல் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக 73 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சிறுவர்கள் தாய், தந்தை அல்லது பெற்றோர் இருவரையும் இழந்தவர்களாகும்.
அவர்களில் பெரும்பாலானோர் பதுளை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும், அந்த மாவட்டத்தில் இவ்வாறான 21 சிறுவர்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளதாக சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் 20 சிறுவர்கள் தாய், தந்தை அல்லது பெற்றோரை இழந்துள்ளனர்.
இதனிடையே, அனர்த்தம் காரணமாக பெற்றோரை இழந்து பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் தகவல்களை திரட்டி மேற்கொள்ளப்படும் கடத்தல் சம்பவங்கள் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





