05 நாடுகள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் ஐந்து நாடுகளில் வசிக்கும் பிரஜைகள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதிய அறிவிப்பின்படி, புர்கினா பாசோ (Burkina Faso), மாலி (Mali), நைஜர் (Niger), தெற்கு சூடான் ( South Sudan) மற்றும் சிரியாவைச் (Syria) சேர்ந்தவர்கள் மற்றும் பாலஸ்தீன ஆணையத்தின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மீது முழு நுழைவு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
இந்த கட்டுப்பாடுகள் “அமெரிக்காவின் பாதுகாப்பை” பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
மேற்படி ட்ரம்பின் உத்தரவு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
முன்னதாக லாவோஸ் (Laos)) மற்றும் சியரா லியோன் (Sierra Leone) ஆகிய நாடுகள் பகுதியளவிலான கட்டுப்பாடுகளின் கீழ் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அவை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





