நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் தாய்லாந்து!
தாய்லாந்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் பெப்ரவரி 08 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டின் தேர்தல் ஒழுங்குமுறை ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.
பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் (Anutin Charnvirakul) அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான பிரச்சினையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிற்கு எதிர்கட்சிகள் அழைப்பு விடுக்க தயாரானதை தொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவு பிறப்பித்தார்.
நீண்டகால எல்லைப் பிரச்சினை தொடர்பாக தாய்லாந்து கம்போடியாவுடன் பெரிய அளவிலான போரில் ஈடுபட்டுள்ள நிலையில் வர இருக்கும் தேர்தல் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.





