நோபல் பரிசு பெற்ற நர்கீஸ் முகமதியை கைது செய்தது ஈரான்!
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கீஸ் முகமதியை (Narges Mohammadi) ஈரானிய அரசாங்கம் இன்று கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷாத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
நர்கீஸ் முகமதியின் சகோதரரை மேற்கோள் காட்டி இந்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.
பாரிஸை தளமாகக் கொண்ட அறக்கட்டளை, வழக்கறிஞர் கோஸ்ரோவ் அலிகோர்டியின் ( Khosrow Alikordi) நினைவு விழாவின் போது முகமதி “வன்முறையாக தடுத்து வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
ஈரானின் மிக முக்கியமான மனித உரிமை வழக்கறிஞர்களில் ஒருவரான முகமதி 2023 இல் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருந்தார்.
கடந்த இரண்டு தசாப்தங்களில் பெரும்பாலான காலத்தை அவர் தெஹ்ரானின் எவின் சிறையில் கைதியாகக் கழித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





