பாரிய அளவு வீழ்ச்சியடையும் சீனாவின் மக்கள் தொகை – ஐ.நா கணிப்பு!
சீனாவில் அடுத்த 10 ஆண்டுகளில் சனத்தொகை அளவு கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2050 ஆம் ஆண்டுக்குள் மக்கள்தொகை சுமார் 140 மில்லியனாகவும், 2100 ஆம் ஆண்டுக்குள் தோராயமாக 760 மில்லியனாகவும் குறையக்கூடும் என்று ஐ.நா. மதிப்பீடுகள் காட்டுகின்றன.
குறைந்து வரும் பிறப்பு விகிதம் என்பது சுருங்கி வரும், வயதான மக்கள்தொகையைக் குறிக்கிறது. இதன் விளைவாக, குறைவான தொழிலாளர்கள் அதிக ஓய்வு பெற்றவர்களை ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
அத்துடன் இதனால் சமூக நலத்திட்டங்கள் பாதிக்கப்படும். குறிப்பாக ஓய்வூதியங்கள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு குறையக்கூடும்.
மேலும் நீண்டகால நிதி ஸ்திரத்தன்மையைத் தடுக்கிறது எனவும் ஐ.நாவின் மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன.





