ஈரான் மற்றொரு பேரழிவை சந்திக்க நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!
ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை ஒப்பந்தம் இல்லாமல் புதுப்பிக்க முயன்றால், அது மற்றொரு பேரழிவு தரும் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஈரானின் அணுசக்தி திறன்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
தாக்குதல்களுக்கு முன்பு ஈரான் ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் பேரழிவைத் தவிர்த்திருக்கலாம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“அணுசக்தியை மறந்துவிடுங்கள். அணுசக்தி போய்விட்டது. ஆனால் அவர்கள் சந்தித்த சேதத்தைப் பாருங்கள், அவர்கள் சந்தித்த மரணத்தைப் பாருங்கள்” எனக் கூறிய அவர், ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் சேதத்தை தவிர்த்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.





