உக்ரேன் குழந்தைகளை வடகொரியாவிற்கு அனுப்பிய ரஷ்யா!
ரஷ்யாவால் கடத்தப்பட்ட உக்ரேனிய குழந்தைகள் வடகொரியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக மனித உரிமை பிரச்சாரகர்கள் தெரிவித்துள்ளனர்.
கியேவை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான பிராந்திய மையம், உக்ரேனிய குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்ட நாட்டில் உள்ள ஒரு முகாமுக்கு அனுப்பப்பட்ட பல வழக்குகளை உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது.
இவ்வாறு நாடு கடத்தப்பட்ட குழந்தைகள், வடகொரியாவில் இராணுவமயமாக்கல் மற்றும் அரசியல் போதனைகளை” எதிர்கொண்டதாகவும், இது குழந்தைகள் இடையே கடுமையான உளவியல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது” என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
டொனெட்ஸ்க் (Donetsk) பகுதியைச் சேர்ந்த 12 வயதான மிஷாவும் (Misha) சிம்ஃபெரோபோலைச் சேர்ந்த 16 வயதான லிசாவும் வட கொரியாவில் உள்ள சாங்டோவன் முகாமுக்கு (Songdowon) அனுப்பட்டதாக ரஷெவ்ஸ்கா (Rashevska) செனட் துணைக்குழுவிடம் கூறியுள்ளார்.
அங்குள்ள குழந்தைகளுக்கு ‘ஜப்பானிய இராணுவவாதிகளை அழிக்க’ கற்றுக்கொடுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





