ஜப்பானில் மீண்டும் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!!
ஜப்பானின் வடகிழக்கில் 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் இன்று காலை பதிவாகியுள்ளது.
ஜப்பானின் முக்கிய தீவான ஹோன்ஷுவின் (Honshu) வடக்கே உள்ள அமோரி (Aomori) மாகாணத்தின் கிழக்கு கடற்கரையில், இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
பசிபிக் கடற்கரையான ஹொக்கைடோ (Hokkaido), அமோரி (Aomori), இவாட் (Iwate) மற்றும் மியாகி (Miyagi) மாகாணங்களில் 1 மீட்டர் (3.2 அடி) வரை சுனாமி ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வார தொடக்கத்தில் வடக்கில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இன்று மீளவும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





