பகையாளிகளின் வான் மண்டலத்திற்கு அருகில் போர் பயிற்சியில் ஈடுபட்ட சீனா, ரஷ்யா!
சீனாவும், ரஷ்யாவும் ஜப்பான் மற்றும் தென் கொரியா அருகே கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்ட நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ரஷ்யாவின் Tu-95 அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் சீனாவின் H-6 குண்டுவீச்சு விமானங்கள், இந்த போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
இது தேசிய பாதுகாப்பு குறித்த கடுமையான கவலையை ஏற்படுத்தியுள்ளதாக ஜப்பான் அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
ஏழு ரஷ்ய மற்றும் இரண்டு சீன போர் விமானங்கள் அதன் வான்வெளியை மீறவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும் தென் கொரியாவின் வான் மண்டலத்தில் சீனாவின் போர் விமானங்கள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தென்கொரியா தங்களுடைய போர் விமானங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.
ஜப்பானிய விமானங்களை ரேடார் மூலம் குறிவைத்து சீன ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக சமீபத்தில் எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, டோக்கியோவிற்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




