மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள் : மாணவர்களுக்கு விஷேட அறிவிப்பு
அனர்த்த காலநிலையினால் மூடப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் அனைவரும் டிசம்பர் 15 ஆம் திகதி சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் சீருடை விடயத்தில், தளர்வான கொள்கை பின்பற்றப்படும் என அவர் தெரிவித்தார்.
ஆகவே பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்த மாணவர்கள் சீருடை தவிர்ந்த சாதாரண உடையில் வர அனுமதிக்கப்பட உள்ளனர்.
நாடளாவிய ரீதியிலுள்ள 10,076 பாடசாலைகளில், 9,929 பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி திறக்கப்படும்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு, உடனடியாகத் திறக்க முடியாத நிலையில் 147 பாடசாலைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.





