இந்தோனேசியாவில் 07 மாடிக் கட்டடத்தில் தீவிபத்து – 17 பேர் பலி!
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் (Jakarta) அமைந்துள்ள கட்டடத்தில் இன்று பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏழு மாடிக் கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.





