பாகிஸ்தானுக்கு 1.2 பில்லியன் டொலர்களை வழங்கும் சர்வதேச நாணய நிதியம்!
பாகிஸ்தானுக்கு 1.2 பில்லியன் டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
IMF நிர்வாகக்குழு பாகிஸ்தானின் பொருளாதாரத் திட்டங்களை இரண்டு முறை மதிப்பாய்வு செய்து அதன் முக்கிய கடன் வசதியின் கீழ் சுமார் 1 பில்லியன் டொலர்களையும், காலநிலை திட்டத்தின் கீழ் மேலும் 200 மில்லியன் டொலர்களையும் வழங்க இணங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
சமீபத்திய ஒப்புதலுடன், பாகிஸ்தான் கடந்த ஆண்டு முதல் IMF இலிருந்து சுமார் 3.3 பில்லியன் டொலர்களை பெற்றுள்ளது.
பாகிஸ்தான், பல தசாப்தங்களாக, அதன் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய IMF மற்றும் நட்பு நாடுகளின் கடன்களை நம்பியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், இது அரசாங்கத்தின் சீர்திருத்த இயக்கத்திற்கும் IMF ஒப்புதல் அளித்த நடவடிக்கைகளை “திறம்பட செயல்படுத்துவதற்கும்” அங்கீகாரம் அளிப்பதாகக் கூறினார்.





