குளிப்பதை தவிர்க்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை
அனர்த்தம் ஏற்பட்ட இடங்களுக்குச் செல்வது மிகவும் ஆபத்தானது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வலுவான நீரோட்டத்துடன் பாயும் நீரினுள் குளிப்பதையோ அல்லது நுழைவதையோ பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான நிவாரணப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன என்றும், ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அவை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர இலக்கமான 117 ஊடாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கனமழை காரணமாக மண் தளர்வுற்றிருப்பதால் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு அவர் எச்சரித்தார்.
இதனால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டால், உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.





