இலங்கையில் 481 பேரின் உயிரை பலியெடுத்த டித்வா புயல்
சீரற்ற வானிலை காரணமாக இலங்கையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 481 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று தெரிவித்துள்ளது.
இதேவேளை, 345 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் அடுத்த 36 மணித்தியாலன்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து வெளியான அறிவிப்பால் மக்கள் மீண்டும் அதிர்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




