அமெரிக்காவிடம் இருந்து இலங்கைக்கு கிடைத்த அவசர கால உதவி
சூறாவளி டிட்வாவின்(Ditwa) கடுமையான தாக்கத்திற்கு பதிலளிக்கும் விதமாக, இலங்கையில் தேவைப்படுபவர்களுக்கு அவசரகால உயிர்காக்கும் உதவியாக $2 மில்லியன் வழங்குவதாக அமெரிக்கா(America) தெரிவித்துள்ளது.
உதவி திறம்பட விநியோகிக்கப்படுவதையும், பேரிடரால் அதிகம் பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சென்றடைவதையும் உறுதி செய்வதற்காக, வெளியுறவுத்துறையின் பிரதிநிதிகள் இலங்கை அரசு மற்றும் நிவாரண அமைப்புகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
சூறாவளியைத் தொடர்ந்து நாடு அத்தியாவசிய மீட்பு மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளை மேற்கொள்ளும்போது, இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து ஒத்துழைப்பதற்கான தனது உறுதிப்பாட்டை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட துயரகரமான உயிர் இழப்பு மற்றும் விரிவான அழிவுக்கு அமெரிக்கா தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.




