கக்குவான் இருமலை கட்டுப்படுத்தும் நாசி ஸ்ப்ரே தடுப்பூசி!
கக்குவான் இருமலுக்கான நாசி ஸ்ப்ரே தடுப்பூசியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
BPZE1 எனப்படும் இந்த தடுப்பூசி மூக்கு மற்றும் தொண்டையில் வசிக்கும் கக்குவான் இருமல் பாக்டீரியாவை தடுப்பதில் சிறப்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளை போல் அல்லாமல் இந்த நாசி ஸ்ப்ரே அனைத்து வயதினருக்கும் நீண்டகால பாதுகாப்பை வழங்குவதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையே பொது சுகாதார அமைச்சர் ஆஷ்லே டால்டன் (Ashley Dalton) இந்த சோதனையை ஒரு ‘பெரிய திருப்புமுனை’ என்று பாராட்டியுள்ளார்.
இது பரவலைக் கணிசமாகக் குறைத்து எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




