பொதுமக்களிடம் அவசரக் கோரிக்கை!
ஹெலிகாப்டர் செயல்பாடுகள் நடைபெறும் பகுதிகளில் ட்ரோன்களை இயக்குவதை தவக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் அறிவுறுத்தியுள்ளார்.
சமீபத்திய பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தேசிய அவசரகால முயற்சிகளை ஆதரிப்பதற்கும் நாட்டின் வான்வெளியின் பாதுகாப்பைப் பராமரிப்பதற்கும் இந்த நேரத்தில் அனைத்து ட்ரோன் இயக்குபவர்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்று இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.




