இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு வட்டி விதிக்க முன்மொழிவு!
துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் சுமார் 900 இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொது நிதிக் குழுவின் (COPF) தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
குறித்த வாகனங்களின் விலைப்பட்டியல் மதிப்பில் வட்டி விதிக்கவும் அவர் முன்மொழிந்துள்ளார்.




