ஹோண்டுராஸின்(Honduras) முன்னாள் ஜனாதிபதி விடுதலை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) மன்னிப்பு வழங்கியதை அடுத்து, போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக நீண்ட சிறைத்தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் ஹோண்டுரான்(Honduras) ஜனாதிபதி ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டஸ்(Juan Orlando Hernandez) விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஹெர்னாண்டஸின் வழக்கறிஞர் ரெனாட்டோ ஸ்டேபில்(Renato Stabile) முன்னாள் ஹோண்டுரான் ஜனாதிபதியின் விடுதலையை உறுதிப்படுத்தியுள்ளார்.

“ஜனாதிபதி டிரம்ப் டிசம்பர் 1, 2025 அன்று கையொப்பமிட்ட முழுமையான மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்பை பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி ஹெர்னாண்டஸ் இன்று அதிகாலை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்,” என்று ரெனாட்டோ ஸ்டேபில் அல் ஜசீராவுக்கு(Al Jazeera) ஒரு மின்னஞ்சல் மூலம் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு, அமெரிக்காவில் கோக்கைன்(cocaine) ஏற்றுமதி செய்யும் திட்டத்தில் ஈடுபட்டதற்காக ஹெர்னாண்டஸுக்கு 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.




