மருத்துவமனையில் உள்ள முன்னாள் வங்கதேச பிரதமர் கலீதா ஜியாவிற்கு உயர் பாதுகாப்பு
வங்கதேச(Bangladesh) முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின்(Khaleda Zia) உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் அவருக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மூன்று முறை நாட்டின் பிரதமராக இருந்த கலீதா ஜியாவிற்கு வங்கதேசத்தின் சிறப்பு பாதுகாப்புப் படை (SSF) பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
டாக்காவில்(Dhaka) உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முன்னாள் பிரதமர் செயற்கை சுவாசக் கருவியின்(ventilator) உதவியுடன் உள்ளார்.
இந்நிலையில், அவரது சிகிச்சையை மேற்பார்வையிட ஐக்கிய இராச்சியத்திலிருந்து(United Kingdom) நிபுணர்கள் குழு ஒன்று வங்கதேசத்திற்கு வருகை தந்துள்ளது.
மேலும், சிகிச்சைக்காக அவரை வெளிநாடு அழைத்துச் செல்வது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் அவரது மருத்துவ நிலையைப் பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி கவலை




