அறிவியல் & தொழில்நுட்பம்

ஆப்பிள் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் பணியமர்த்தப்படும் இந்தியர்!

ஆப்பிளின் செயற்கை நுண்ணறிவு மற்றும் AI உத்திக்கான  மூத்த துணைத் தலைவரான  ஜோன் கியானாண்ட்ரியா (John Giannandrea) பதவி விலகியுள்ளார்.

 குறித்த பதவிக்கு புதிய தலைவராக மைக்ரோசாப்ட் AI நிர்வாகி அமர் சுப்பிரமணியா (Amar Subramanya) நியமிக்கப்பட்டுள்ளார்.

 இரண்டு தசாப்தங்களாக இந்த துறையில் பணியாற்றிய அவர் AI, ஜெமினியின் வளர்ச்சியை மேற்பார்வையிட்டுள்ளார்.

ஜான் கியானாண்ட்ரியா (John Giannandrea) அடுத்த ஆண்டு  பதவி விலகும் வரை ஆப்பிளின் ஆலோசகராகத் தொடர்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆப்பிளின் தலைமை நிர்வாகி டிம் குக் (Tim Cook), எங்கள் AI பணிகளை உருவாக்குவதிலும் முன்னேற்றுவதிலும் ஜோன் ஆற்றிய பங்கிற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம், ஆப்பிள் எங்கள் பயனர்களின் வாழ்க்கையை தொடர்ந்து புதுமைப்படுத்தவும் வளப்படுத்தவும் உதவுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுப்பிரமணியா தனது அசாதாரண AI நிபுணத்துவத்தை ஆப்பிள் நிறுவனத்திற்கு கொண்டு வருவார் எனவும் டிம் குக் (Tim Cook) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆப்பிள் நிறுவனம் பல ஆண்டுகளாக AI துறையில் தனது போட்டியாளர்களை விட பின்தங்கியுள்ளதாக விமர்சிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!