இலங்கைக்கு உதவிகளை வாரி வழங்கும் உலக நாடுகள்
அவுஸ்திரேலியா
டித்வா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உடனடி அவசர நிவாரணமாக அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒருமில்லியன் அவுஸ்திரேலிய டொலரை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த நிதியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணமாக பயன்படுத்தப்படும் என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
சீனா
இதேவேளை, பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காக ஒரு இலட்சம் அமெரிக்க டொலரை சீனாவும் வழங்கியுள்ளது.
இந்த நிதியை சீன செஞ்சிலுவை சங்கம், இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு அவசர நிவாரண உதவியாக வழங்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தமது எக்ஸ் கணக்கில் தெரிவித்துள்ளது.
ஜப்பான்
மேலும், இலங்கையில் பாதிப்புகளுக்குப் பதிலளிக்க சர்வதேச அவசர உதவிக் குழுவை ஜப்பான் அனுப்புகிறது.
இலங்கை ஏற்பட்ட டித்வா சூறாவளி காரணமாக பரவலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து, அவசர தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஜப்பான் அரசு ஒரு சர்வதேச அவசர உதவிக் குழு மற்றும் மருத்துவக் குழுவை அனுப்புவதற்கு முடிவு செய்துள்ளது.
இந்தியா
மேலும், இந்தியாவும் இரண்டாம் கட்டமாக இலங்கைக்கு அவசர உதவியை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






