புலம்பெயர் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் நிவாரண நிதி வழங்க அரசாங்கம் அழைப்பு
நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளுக்கு உதவ, புலம்பெயர் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் நிதி உதவிகளை வழங்கலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு (President’s Media Division – PMD) இன்று வெளியிட்டுள்ளது.
நன்கொடைக்கான வங்கிக் கணக்குகள்
நன்கொடைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, இரண்டு பிரத்தியேக வங்கிக் கணக்குகள் நிறுவப்பட்டுள்ளன:
உள்ளூர் நாணயத்தில் வழங்கப்படும் பங்களிப்புகளை ஏற்றுக்கொள்வதற்காக ஒரு கணக்கும்
வெளிநாட்டு நாணயத்தில் (அமெரிக்க டாலர்) வழங்கப்படும் பங்களிப்புகளை ஏற்றுக்கொள்வதற்காக ஒரு தனிக் கணக்கும் நிறுவப்பட்டுள்ளது என்றும்.
இவ் அறிக்கையானது
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள், வெளிநாடுகளில் கடமையாற்றும் இலங்கைத் தூதுவர்கள் ஆகியோருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று நடத்திய கலந்துரையாடலின் போதே இந்தத் தகவல்கள் பகிரப்பட்டன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




