உலகம்

பிரேசிலில் குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கு வரி விலக்கு – செல்வந்தர்களுக்கு வைக்கப்பட்டுள்ள குறி!

பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (Luiz Inácio Lula da Silva) இன்று ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த புதிய சட்டமானது மாதத்திற்கு 5,000 ரியாஸ் ($940) வரை வருமானம் ஈட்டும் மக்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தற்போது வழங்கிவரும் வருமான வரி சலுகையை இரட்டிப்பாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அவரது தேர்தல் வாக்குறுதியையும்  பூர்த்தி செய்துள்ளது.

அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் இந்த சட்டமானது, 7,350 ரியாஸ் ($1400) வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி விலக்கு அளிக்கும்.

இதற்கமைய  சுமார் 15 மில்லியன் பிரேசிலியர்கள் புதிய சட்டத்தின் மூலம் பயனடைவார்கள் எனவும், தோராயமாக 10 மில்லியன் பேர் இனி வருமான வரி செலுத்த மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மாநில வருவாய் இழப்பை ஈடுசெய்ய, அரசாங்கம் அதிக வருமானம் கொண்ட தனிநபர்களுக்கு குறைந்தபட்ச பயனுள்ள வரி விகிதத்தை அறிமுகப்படுத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

புதிய சட்டம் நாட்டில் உள்ள சுமார் 140,000 செல்வந்தர்களை இலக்காகக் கொண்டிருப்பதாகவும் அந்நாட்டின் நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அவர்கள் தற்போது 2.5 சதவீதம் வரி செலுத்துகிறார்கள். இது 10 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!