கொழும்பு-பதுளை ரயில் பயணங்களில் மாற்றம்
நாட்டில் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக, கொழும்பு கோட்டைக்கும்(Colombo Fort) பதுளைக்கும்(Badulla) இடையிலான அனைத்து மலையக ரயில் சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை நானுஓயா(Nanu Oya) ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
நிலவும் பாதகமான வானிலை காரணமாக மலையக ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, கொழும்பு கோட்டை நிலையத்திலிருந்து பதுளைக்கு இயக்க திட்டமிடப்பட்ட இரவு அஞ்சல் ரயில் நானுஓயா நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.
மேலும், பதுளையிலிருந்து கொழும்புக்கு இயக்கப்படும் இரவு அஞ்சல் ரயில் நானுஓயா நிலையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கும்.





