செய்தி விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா

பிரபல தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

அந்தவகையில், முதலில் நடந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை தென் ஆப்பிரிக்கா அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது.

அதனை தொடர்ந்து, கவுகாத்தியில்(Guwahati) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற தென் ஆப்பிரிக்கா அணி துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.

முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தென் ஆப்பிரிக்கா அணி சகல விக்கெட்களையும் இழந்து 489 ஓட்டங்களை பெற்றது.

தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் செனுரன் முத்துசாமி(Senuran Muthusamy) 109 ஓட்டங்களும் மார்கோ ஜான்சன்(Marco Jansen) 93 ஓட்டங்களும் பெற்றனர்.

அதனை தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி சகல விக்கெட்களையும் இழந்து 201 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால்(Yashasvi Jaiswal) 58 ஓட்டங்களும் வாஷிங்டன் சுந்தர்(Washington Sundar) 48 ஓட்டங்களும் பெற்றனர்.

288 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட்களை இழந்து 260 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் இன்னிங்ஸை கைவிட்டது.

தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ஸ்டப்ஸ்(Stubbs) 94 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்நிலையில், 548 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 140 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து போட்டியில் தோல்வியடைந்தது.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 408 ஓட்டங்களில் வெற்றிபெற்று இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை மார்கோ ஜான்சன்(Marco Jansen) கைப்பற்றிய நிலையில் தொடரின் நாயகன் விருதை சைமன் ஹார்மர்(Simon Harmer) பெற்றுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!