ஐரோப்பா

பிரித்தானியாவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு!

பிரித்தானியாவில்  அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) இன்று தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு 1500 பவுண்ட்ஸ் சம்பள உயர்வு கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தொழிலாளர்களுக்கு ஊதியமானது 4.7% சதவீதம் அதிகரித்து ஒரு மணி நேரத்திற்கு £12.71 ஆக அதிகரிக்கப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது முழுநேர ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் £900 ஊக்கத்தை அளிக்கும் எனவும் ரீவ்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் 18 -20 வயதுடைய தொழிலாளர்களுக்கான ஒருமணிநேர ஊதியமானது £10.85 ஆக அதிகரிக்கும் என்றும் ரீவ்ஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!