வங்க தேசத்தில் குடிசை வீடுகளில் தீவிபத்து – 1500 வீடுகள் நாசம்!
வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள குடிசை வீடுகளில் நேற்று இரவு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் 1,500 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
டாக்காவில் உள்ள குடிசை வீடுகளின் வரிசையில் தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
தீயை அணைக்க சுமார் 19 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், 05 மணிநேர போராட்டத்தின் பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




