முத்தரப்பு T20 தொடர் – இலங்கை அணிக்கு 147 ஓட்டங்கள் இலக்கு
பாகிஸ்தான், இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு T20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெறும் 5வது போட்டியில் சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற சிம்பாப்வே அணி துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.
அந்தவகையில், முதலில் களமிறங்கிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
சிம்பாப்வே அணி சார்பில் பிரையன் பென்னட்(Brian Bennett) 34 ஓட்டங்களும் சிக்கந்தர் ராசா(Sikandar Raza) மற்றும் ரியான் பர்ல்(Ryan Burl) 37 ஓட்டங்கள் பெற்றனர்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷண(Maheesh Teekshana) மற்றும் வணிந்து ஹசரங்க(Wanindu Hasaranga) தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர்.
இந்நிலையில், 174 ஓட்ட இலக்கை நோக்கி விளையாடி வரும் இலங்கை அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 85 ஓட்டங்களை பெற்றுள்ளது.





