பணிப்புறக்கணிப்பில் இறங்கிய ஊழியர்கள் – பெல்ஜியத்தில் விமான சேவைகள் இரத்து
பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் (Brussels) விமான நிலையம் உள்வரும் விமானங்களில் 110 விமானங்களை இரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதேபோல் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பெல்ஜிய அரசாங்கத்தின் சிக்கனத் திட்டங்களை எதிர்த்து பாதுகாப்பு மற்றும் தரைவழி கையாளுதல் ஊழியர்கள் நாடு தழுவிய ரீதியில் இன்று தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்காரணமாகவே மேற்படி விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புத்தாண்டு காலப்பகுதியில் ரயில்வே தொழிலாளர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





