ஜே.வி.பியின் செயலருக்கு எதிராக லண்டனில் போராட்டம்: அரசு கூறுவது என்ன?
புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்களில் சிறுகுழுவினரே போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த குழுவானது ஒட்டுமொத்த புலம்பெயர் இலங்கையர்களை பிரதிபலிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு எதிராக லண்டனின் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பட்டது. புலம்பெயர் மக்களின் ஆதரவை அரசாங்கம் இழந்துவிட்டதா எனவும் வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “ புலம்பெயர்ந்த இலங்கையர்கள் என்பது பரந்தப்பட்ட விடயம். புலம்பெயர் இலங்கையர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே ரில்வின் சில்வா லண்டன் சென்றார்.
இலங்கைக்கு முதலீடுகளை மேற்கொள்ள தயாராக இருப்பதும் புலம்பெயர் மக்கள்தான். எனவே, சிறு குழுவொன்றுதான் போராட்டத்தில் ஈடுபட்டது. அத்தகைய குழு அனைத்து நாடுகளிலும் இருக்கக்கூடும்.” என்றார்.
புலம்பெயர்ந்த மக்களில் சிறு குழுவொன்றே போராட்டத்தில் ஈடுபட்டது. போராட்டத்தில் பங்கேற்ற தரப்பு எமக்கு உதவினார்களா என தெரியவில்லை” என்றார்.





