ஜப்பானில் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்திய கார் – இருவர் கைது!
ஜப்பானில் கார் ஒன்று பொதுமக்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
இதில் 10 பேர் காயமடைந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஓட்டுனர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.





