வாழ்வா? சாவா? நிலையில் நோயாளிகள் -அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் பலர்!
கொழும்பு தேசிய மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக கிட்டத்தட்ட 5,000 நோயாளிகள் தற்போது காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிலர் அறுவை சிகிச்சைக்காக நான்கு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்று மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவர் டாக்டர் சமல் சஞ்சீவ கூறியுள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெறப்பட்ட தரவுகளிலிருந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது,
மருத்துவமனையில் உள்ள ஐந்து இதய அறுவை சிகிச்சை வார்டுகளில் ஏராளமான நோயாளிகள் காத்திருப்பு பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நோயாளிகளில் பலர் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், தனியார் மருத்துவமனைகளில் இதய அறுவை சிகிச்சைக்கு குறைந்தபட்சம் ரூ. 2 மில்லியன் செலவாகும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுத்துறையில் அறுவை சிகிச்சைக்கு முன்பே நோயாளிகள் இறக்கும் ஆபத்து மிக அதிகமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





