இந்தியா செய்தி

மகாராஷ்டிராவில் இளம் கால்பந்து வீரர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

மகாராஷ்டிராவின்(Maharashtra) பால்கர் பகுதியில்(Palghar)உள்ள ஒரு மரத்தில் மும்பையைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட கால்பந்து வீரரின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புனேவில்(Pune) கால்பந்து விளையாடப் போவதாக தனது குடும்பத்தினரிடம் தெரிவித்த சாகர் சோர்டி(Sagar Sorti) கடந்த15ம் திகதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மறுநாள், அவரது குடும்பத்தினரால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு, நவம்பர் 18ம் திகதி, ஒரு மரத்தில் கயிற்றால் தொங்கிய நிலையில் அவரது உடல் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாகர் சோர்டியின் தொலைபேசி மூலம் சம்பவ இடத்தை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

சோர்டியின் குடும்பத்தினரின் கூற்றுப்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உடல் மும்பையில்(Mumbai) உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது, மேலும் அறிக்கை வந்த பிறகு இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று காவல் கண்காணிப்பாளர் யதீஷ் தேஷ்முக்(atish Deshmukh) குறிப்பிட்டுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!