நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்களில் 50 பேர் மீட்பு – கிறிஸ்தவக் குழு
நைஜீரியாவில்(Nigeria) உள்ள ஒரு கத்தோலிக்கப் பாடசாலையில் இருந்து துப்பாக்கிதாரிகளால் கடத்தப்பட்ட 300க்கும் மேற்பட்ட மாணவர்களில் குறைந்தது 50 பேர் சிறைப்பிடிக்கப்பட்டவர்களிடமிருந்து தப்பித்ததாக சம்பவத்தைக் கண்காணிக்கும் ஒரு கிறிஸ்தவக் குழு தெரிவித்துள்ளது.
வட-மத்திய நைஜீரியாவின் நைஜர்(Niger) மாநிலத்தில் உள்ள செயிண்ட் மேரி(St. Mary) கத்தோலிக்கப் பாடசாலையை துப்பாக்கிதாரிகள் தாக்கி, 303 குழந்தைகளையும் 12 ஆசிரியர்களையும் கடத்தி சென்றனர்.
நைஜீரியாவின் கிறிஸ்தவ சங்கம்(CAN) 50 மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தற்போது அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
“அதிக ஆபத்துடன் தப்பிய இந்த 50 குழந்தைகள் திரும்பி வந்ததைப் போலவே, மீதமுள்ள குழந்தைகளும் பாதுகாப்பாக திரும்பி வருவதற்காக அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று நைஜர் மாநிலத்தின் கிறிஸ்தவ சங்க தலைவர் ரெவரெண்ட் புலஸ் டவுவா யோஹன்னா(Reverend Bulus Dauwa Yohanna) குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி
நைஜீரியாவில் ஆயுத முனையில் கடத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!




