சைபர் குற்றங்கள் – மியன்மாரில் ஏறக்குறைய 1600 பேர் கைது!
தாய்லாந்து எல்லையில் உள்ள இணைய மோசடிமையத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் 1600 வெளிநாட்டு பிரஜைகளை கைது செய்துள்ளதாக மியன்மார் இராணுவம் இன்று அறிவித்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட மியான்மரின் எல்லைப் பகுதிகளில் மோசடி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மோசடி கும்பல்கள் இணையம் மூலம் பல குற்றங்களை செய்து வருகின்றன.
இந்நிலையில் நவம்பர் 18 முதல் 22 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 1,590 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக நேற்று மட்டும் 223 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 100 பேர் சீனாவை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஆன்லைன் மோசடி மற்றும் சூதாட்ட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் 2,893 கணினிகள், 21,750 மொபைல் போன்கள், 101 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் பெறுநர்கள், 21 Routers ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





