50 மில்லியன் டொலர் வெகுமதி – வெனிசுலாவில் புதிய திட்டத்தை அமுல்படுத்திய ட்ரம்ப்!
வெனிசுலாவின் தலைநகரின் மீது துண்டுப் பிரசுரங்களை வீச அமெரிக்க இராணுவத்தினருக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro) மீது அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வெனிசுலாவிற்கு எதிரான அமெரிக்காவின் சமீபத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
போதைப் பொருள் கடத்தல் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் மதுரோவின் கைது மற்றும் தண்டனைக்கு வழிவகுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு வெகுமதிகள் வழங்குவது உள்ளிட்ட விவரங்களை உள்ளடக்கிய துண்டுபிரசூரங்களை அந்நாட்டின் தலைநகரின் மீது வீச முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2013 முதல் மதுரோ ஆட்சியில் உள்ளார். 2024 ஜனாதிபதித் தேர்தலில் மதுரோ தோல்வியடைந்ததாகக் கூறி அமெரிக்கா உட்பட 50க்கும் மேற்பட்ட நாடுகள், அவரை அரச தலைவராக அங்கீகரிக்க மறுத்துவிட்டன.
இந்நிலையில் 2020 ஆம் ஆண்டில், போதைப்பொருள் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் தொடர்பான அவரது கைது அல்லது தண்டனைக்கு வழிவகுக்கும் தகவல்களுக்கு வெளியுறவுத்துறை 15 மில்லியன் டொலர்கள் வரை வெகுமதி வழங்கியது.
பைடன் நிர்வாகம் அந்த வெகுமதியை $25 மில்லியனாக உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் நிர்வாகம் அந்த தொகையை கடந்த ஆகஸ்ட் மாதம், இரட்டிப்பாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





