காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் – ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு!
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடக்கு மற்றும் மத்திய காசாவை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குடியிருப்பு பகுதிகள் உட்பட ஐந்து இடங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், ஹமாஸின் மூத்த தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் பயங்கரவாதிகளை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் கூறிவருகிறது.
(Visited 8 times, 8 visits today)





