ரஷ்யாவிற்கு சாதாகமான ட்ரம்பின் கோரிக்கை – ஒன்றுக்கூடும் ஐரோப்பிய தலைவர்கள்!
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க திட்டத்திற்கு மாற்று வழிகளைப் பற்றி விவாதிக்க ஐரோப்பிய தலைவர்கள் தென்னாப்பிரிக்காவில் ஒன்றுக்கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் 28 அம்ச பரிந்துரைகளில் உக்ரைனின் நிலத்தை விட்டுக்கொடுப்பது, மற்றும் நேட்டோவில் சேரும் முயற்சியை கைவிடுவது மற்றும் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைப்பது உள்ளிட்ட நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது கீவ் மற்றும் ஐரோப்பிய தலைநகரங்களில் எச்சரிக்கையை ஏற்படுத்தியது. பெரும்பாலும் இந்த பரிந்துரைகள் ரஷ்யாவிற்கு சாதகமாகவே உள்ளன.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது நாடு அதன் இறையாண்மை உரிமைகளுக்கும் அமெரிக்க ஆதரவைப் பாதுகாப்பதற்கும் இடையில் ஒரு கடினமான தேர்வை எதிர்கொள்ளக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) உட்பட ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தைகளும் உக்ரைனின் தலையீடு இன்றி மேற்கொள்ளக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையிலேயே இந்த 28 அம்ச கோரிக்கைகள் மற்றும் போர் நிறுத்தம் தொடர்பில் ஆராய ஐரோப்பிய தலைவர்கள் ஒன்றுக்கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





