போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் – பலர் உயிரிழந்ததாக தகவல்!
காசாவின் தெற்கு நகரமான கான் யூனிஸில் (Khan Younis) இஸ்ரேலியர்கள் இன்று தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 05 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் சுமார் 12 மணி நேரத்திற்குள் பாலஸ்தீன பிரதேசத்தில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கான் யூனிஸில் இஸ்ரேலிய துருப்புக்களை நோக்கி `ஹமாஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அதற்கு பதிலாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால் இந்த கூற்றை ஹமாஸ் மறுக்கிறது.
இஸ்ரேலிய தாக்குதல்களை “அதிர்ச்சியூட்டும் படுகொலை” என்று ஹமாஸ் போராளிக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்தம் இந்த தாக்குதலை தொடர்ந்து நீடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





