நேபாளத்தில் வெடித்த மோதல் – ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!
நேபாளத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணி மோதலில் முடிந்துள்ளது.
இந்நிலையில் மோதலை கட்டுக்குள் கொண்டுவர இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் காத்மாண்டுவின் தெற்கே உள்ள பாரா (Bara) மாவட்டத்தில் உள்ள சிமாரா நகரில் (Simara) நேற்றைய தினம் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்களுக்கும், இளம் தலைமுறை போராட்டக்கார்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வன்முறையை தூண்டும் வகையில் தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் காலத்தில் பொதுமக்கள் ஒன்றுக்கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாரா மாவட்டத்தில் ஒன்றுக்கூட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





