உதய்பூரில் நடைபெறும் திருமணத்திற்காக இந்தியா வரும் டொனால்ட் டிரம்பின் மகன்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின்(Donald Trump) மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர்(Donald Trump Jr) இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர வாய்ப்புள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானின் உதய்பூரில்(Udaipur) நடைபெறும் இந்திய அமெரிக்க தம்பதியினரின் உயர்மட்ட திருமணத்தில் டிரம்ப் ஜூனியர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது வருகையை முன்னிட்டு, அமெரிக்க பாதுகாப்பு நிறுவனத்தின் குழு ஏற்கனவே உதய்பூருக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் பிச்சோலா(Pichola) ஏரியின் நடுவில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஜக் மந்திர்(Jag Mandir) அரண்மனையில் திருமணம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் ஜூனியரைத் தவிர, பல அரசியல்வாதிகள் மற்றும் இந்திய பிரபலங்களும் திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





