உத்தரபிரதேசத்தில் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி
உத்தரபிரதேச(Uttar Pradesh) மாநிலம் ஹமிர்பூரில்(Hamirpur) மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்ட பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பாதிக்கப்பட்டவரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், ஸ்ரீ ராம் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, இந்த சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்வதாக மிரட்டி அவரை பலமுறை வன்கொடுமை செய்துள்ளார்.
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீ ராம் மீது BNS மற்றும் POCSO சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று காவல்துறை அதிகாரி உமேஷ் குமார் சிங் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 4 times, 4 visits today)




