தென்கொரியாவில் பாறையில் மோதி விபத்துக்குள்ளான கப்பல் !
தென்கொரியாவில் ஏறக்குறைய 270 பேரை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று பாறைகளில் மோதி இன்று விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
கப்பல் நாட்டின் தெற்கு தீவான ஜெஜுவிலிருந்து (Jeju) தென்மேற்கு துறைமுக நகரமான மோக்போவுக்குப் (Mokpo) பயணித்த கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக கடலோர காவல்படையினர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.
கப்பலில் இருந்தவர்களை மீட்க அனைத்து வசதிகளையும் திரட்டி வருவதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
(Visited 1 times, 2 visits today)





