காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து – 64 பேர் மாயம்!
காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 64 பேர் காணாமல் போனதாக அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர்.
கசாய் (Kasai) மாகாணத்தில் உள்ள சங்குரு (Sankuru) ஆற்றின் முகத்துவாரத்தில் கடந்த திங்கட்கிழமை இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
படகில் 120 பேர் இருந்ததாகவும், அவர்களில் 54 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் 64 பேர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாட்டில் மலிவான அல்லது தரம் குறைந்த படகுகளை பயன்படுத்தி ஆற்றை கடப்பதால் இவ்வாறான விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)





