சட்டவிரோத இடப்பெயர்வை கட்டுப்படுத்த சர்ச்சைக்குரிய நடவடிக்கையை கையில் எடுத்த பிரான்ஸ்!
ஆங்கிலக் கால்வாயை கடக்கும் சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்துவதற்காக பிரான்ஸ் கைது வலைகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.
30 மீட்டர் அகலம் கொண்ட இந்த வலைகள், படகு ஓட்டுநர்களைத் தடுக்கவும், அவற்றின் பாதையை சீர்குலைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் பீதியை ஏற்படுத்தக்கூடும் என்பதுடன் உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கும் எனவும் பிரெஞ்சு கடலோரக் காவல்படையினரும் தொழிற்சங்கங்களும் எச்சரித்துள்ளன.
அத்துடன் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளால் அதிகாரிகள் குற்றவியல் வழக்குகளில் சிக்குவதற்கான வாய்ப்பிருப்பதாகவும் வழக்குறைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் சட்டவிரோத இடப் பெயர்வை தடுப்பது தொடர்பில் இங்கிலாந்தின் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





