சீனாவில் உள்ள ஜப்பானிய குடிமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை!
ஜப்பான் மற்றும் சீனாவிற்கு இடையிலான இராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவில் வாழும் ஜப்பானிய குடிமக்களின் பாதுகாப்பை பலப்படுத்த ஜப்பான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி நெரிசலான இடங்களை தவிர்க்குமாறு ஜப்பானியர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தைவான் ஜலசந்தியில் மோதல் ஏற்பட்டால், டோக்கியோ தனது இராணுவப் படைகளை நிலைநிறுத்தலாம் என்று ஜப்பானியப் பிரதமர் சானே தகைச்சி (anae Takaichi) அறிவித்ததை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதனை தவிர்க்க நேற்று ஜப்பானிய மூத்த அதிகாரி ஒருவர் பெய்ஜிங்கில் சீன பிரதிநிதி ஒருவரை சந்தித்தார். இருப்பினும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் ஜப்பானுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு சீனா தன்னாட்டு குடிமக்களிடம் கேட்டுக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து ஜப்பான் சீனாவில் தங்கியுள்ள ஜப்பானியர்களின் பாதுகாப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





