அமெரிக்காவில் உலகக்கோப்பை கால்பந்து – விசா கட்டுப்பாடுகளை தளர்த்தும் ட்ரம்ப்
அமெரிக்காவில் உலகக்கோப்பை கால்பந்து தொடரைக் காண வரும் வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்காக, விசா வழங்கும் நடைமுறைகளை ட்ரம்ப் நிர்வாகம் தளர்த்தியுள்ளது.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொதுவாக அமெரிக்க விசா நேர்காணலுக்காக வெளிநாட்டினர் பல மாதங்கள் காத்திருக்க நேரிடும்.
இந்தநிலையில், கால்பந்து போட்டிகளுக்கான டிக்கெட்களை வைத்திருப்பவர்கள் 2 மாதங்களுக்குள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio) தெரிவித்துள்ளார்.
மேலும் உலகக்கோப்பை கால்பந்து தொடரைக் காண வருவோருக்கு மாத்திரம் முன்னுரிமை அடிப்படையில் அமெரிக்க விசா வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போட்டிகளைக் காண சுமார் ஒரு கோடிப் பார்வையாளர்கள் அமெரிக்காவுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு நாட்டுக்குள் வருவோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கிவிடக்கூடாது என்றும் அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.





