விமான நிலையம் ஒன்றில் இந்திய பெண்ணுக்கு நேர்ந்த கதி – விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு
இந்திய பெண் ஒருவரை விமானத்தில் ஏற்ற தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகள் மறுத்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் கடுமையாகக் காயமடைந்திருந்த பெண், இந்தியா செல்ல முயன்றுள்ளார்.
எனினும் மோசமான உடல்நிலையுடன் அவர் பயணம் மேற்கொள்ள அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 11ஆம் திகதி நடந்துள்ள நிலையில், தற்போது ஊடகங்கள் வாயிலாக வெளியாகி உள்ளது.
குறித்த இந்திய பெண்ணுக்குக் கை முறிந்து, கழுத்து எலும்பு விலகி, நுரையீரல் வீக்கமடைந்திருந்தது.
அவரது உடல்நிலை குறித்து விமான நிறுவனத்துக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் விமான நுழைவுச்சீட்டு அவரிடம் இருந்தபோதும், பாதுகாப்புக் காரணங்களுக்காகவே விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.
இதையடுத்து, பெண் மற்றும் அவருடன் இருந்தவர்கள் சுற்றுலாக் காவல்துறை அதிகாரிகளை நாடியுள்ளனர். அதிகாரிகள் சியாங் மாயிலுள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு நிலைமையை தெளிவுபடுத்தியுள்ளது.
அதற்கமைய குறித்த விமான பயணம் நிறுத்தப்பட்டதுடன் மருத்துவ சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல்நிலை குணமடைந்ததும் இந்தியா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்து தருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை உடல்நலமில்லாத பயணிகள் தங்களது நிலவரத்தை விமான நிறுவனத்திடம் முன்கூட்டியே தெரிவித்தால் சிக்கலின்றிப் பயணதை மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.





